வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

0 3032

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 4 விழுக்காடாகவும், வங்கிகளிடம் இருந்து பெறும் வைப்புத் தொகைக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் 3 புள்ளி மூன்று ஐந்து விழுக்காடாகவும் நீடிப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மும்பையில் பேசிய அவர், முந்தைய விகிதங்களே மாற்றமின்றித் தொடர்வதாகத் தெரிவித்தார். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதம் 4 புள்ளி இரண்டு ஐந்து விழுக்காடாக நீடிப்பதாகவும் தெரிவித்தார்.

பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரி, மதிப்புக் கூட்டு வரி ஆகியவற்றைக் குறைத்தது வாங்கும் சக்தியையும் அதிகரித்து நுகர்வுத் தேவைக்கு ஆதரவளிக்கும் எனத் தெரிவித்தார். நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 9 புள்ளி 5 விழுக்காடாக இருக்கும் எனக் கணித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments