மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையங்களை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

0 4469

நெல்லை, மதுரை மற்றும் தஞ்சையில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைக்கிறார்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் 175 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. சுவர்கள் முழுவதும் மதுரையின் நினைவுகளையும், பெருமைகளையும் போற்றும் வகையில் ஓவியங்கள்,படங்கள் வரையப்பட்டுள்ளன.

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் ஆகியவை 110 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. நெல்லை பேருந்து நிலையத்தில் அறிவியல் தொடர்பான கருவிகள், படங்கள், ராக்கெட் வடிவமைப்பு உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சையில் 30 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தஞ்சை பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 3 பேருந்து நிலையங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments