மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியின் விளிம்பில் ஆப்கானிஸ்தான்-ஐநா சபை
ஆப்கானிஸ்தானில் அகதிகள் அதிகரித்து வருவதால் அந்நாடு உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியின் விளிம்பில் இருப்பதாக ஐநா சபை எச்சரித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவு காரணமாக வரும் பனிக்காலத்தில் 38 மில்லியன் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் பட்டினியால் வாடுவார்கள் என ஐநா சபையின் அகதிகளுக்கான ஐநா உயர் ஆணையர் ஃபிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார்.
எனவே அந்நாடு அவசரமான பொருளாதார உதவியை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகவும் கிராண்டி கூறியுள்ளார்.
Comments