கிரிப்டோகரன்சிக்கு முழுத்தடை விதிக்கப்படுமா ? மத்திய அரசின் வரைவு மசோதாவில் கடுமையாக்கப்படும் சட்டங்கள்..!
பிட்காய்ன் உள்ளிட்ட அனைத்து கிரிப்டோ கரன்சிகளையும் தடை செய்யும் வரைவு மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது.
அப்படி செய்யப்பட்டால், சட்டவிரோதமாக டிஜிட்டல் கிரிப்டோ பணப்பரிவர்த்தனை செய்வோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.கிரிப்டோ பணத்தை மாற்றாக ஏற்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் கிரிப்டோ சொத்துகளாக அதனை ஏற்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. கிரிப்டோ கரன்சி தடை செய்யப்படுமானால், விதிகளை மீறி பயன்படுத்துவோரை வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், ஜாமீனில் விடுவிக்க மறுக்கவும் சட்டம் கடுமையாக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Comments