500 ரூபாய் போலி என்று பரவும் வதந்தி-மகாத்மா காந்தி அருகில் கோடு உள்ள நோட்டும் செல்லும் என்று அரசுத் தரப்பு விளக்கம்
500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தி உருவத்தின் அருகே பச்சைக் கோடு தெரிந்தால் அது போலி நோட்டு என்றும் செல்லாது என்றும் வதந்திபரவி பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த வதந்திக்கு அரசுத் தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.
500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி அருகே பச்சைக் கோடு மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் கையெழுத்து அருகே கோடு உள்ள இரண்டு வகைகள் இருக்கின்றன. இவை இரண்டு வகைகளும் செல்லும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இரண்டு வகை நோட்டுகளின் மதிப்பும் ஒரே மாதிரிதான் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
Comments