புதிதாகத் திறக்கப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் ராகுல்காந்தியின் புகைப்படம்.. பாஜகவினருக்கும் - காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம்.!

0 4079

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட பதிவுத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தியின் புகைப்படத்தை எடுத்துவிட்டு, பிரதமர் மோடியின் படத்தை வைக்கக் கூறிய பாஜகவினருக்கும் - காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

கடலூர் - விருத்தாசலம் புறவழிச்சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் காந்தியடிகளின் படத்துடன், முன்னாள் பிரதமர்கள் நேரு, இராஜுவ்காந்தி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ராகுல்காந்தி உள்ளிட்டோரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த பாஜகவினர், அரசு அலுவலகத்தில் ராகுல்காந்தியின் புகைப்படம் எதற்கு ? என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அவரது புகைப்படம் அகற்றப்பட்டது. 

தொடர்ந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என அவர்கள் கூறவே, அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு அங்கிருந்து பா.ஜகவினரை மாற்று கட்சியினர் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments