பரோட்டா சாப்பிட்ட பின் செரிமானக் கோளாறு... 5 மாத கர்ப்பிணியும், வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்களும் உயிரிழந்த பரிதாபம்

0 5952

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரோட்டா சாப்பிட்டு செரிமானம் ஆகாமல் தவித்ததாகக் கூறப்படும் 5 மாத கர்ப்பிணியும் அவரது வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வதுவார்பட்டியைச் சேர்ந்த அனந்தாயி என்ற அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். 5 மாதங்கள் ஆன நிலையில் ஸ்கேன் பரிசோதனையில் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் வளர்வது தெரியவந்துள்ளது.

திங்கட்கிழமை இரவு அனந்தாயி பரோட்டா சாப்பிட்டார் என்று கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் வயிற்று வலியால் துடித்த அவர், தொடர்ச்சியாக வாந்தி எடுத்தார் என்றும் கூறப்படுகிறது.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அனந்தாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனையின் இறுதி அறிக்கை வந்த பிறகே, அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments