வடகிழக்கு பருவக்காற்று வலுவாக இல்லை.. கடலோர மாவட்டங்களில் பனிமூட்டம் நிலவ வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவக் காற்று வலுவாக இல்லாததால் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் புதன்கிழமை அதிகாலை பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில், மீண்டும் கிழக்கு திசையிலிருந்து வடகிழக்கு பருவக்காற்று தமிழ்நாடு நிலப்பரப்புக்குள் வீசத் தொடங்கியுள்ளது.
ஆனால் இந்த காற்று வலுவாக இல்லாததாலும் வெப்பநிலை சராசரியாக 30 டிகிரிக்கும் மேல் பதிவாகியுள்ள நிலையில் அதன் தாக்கத்தால் அதிகாலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடிய வாய்ப்புள்ளது. அதே நேரம் நாளை மீண்டும் வடகிழக்கு காற்றின் வலு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மழைக்கான வாய்ப்பு நீடிப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments