ராணிப்பேட்டையில் தனியார் வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து 24 லட்ச ரூபாய் மோசடி செய்த வியாபாரி மற்றும் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் கைது..!

0 3609

ராணிப்பேட்டை மாவட்டம் ஆர்க்காட்டில், தனியார் வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து 24 லட்ச ரூபாய் மோசடி செய்த வியாபாரி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர்.

சிறு கடைகளுக்கு திண்பண்டங்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வரும் அசோக்குமார், ஆர்க்காட்டில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் பல முறை நகைகளை அடகு வைத்து சுமார் 24 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.

அடிக்கடி நகையை அடகு வைக்க வந்ததால் சந்தேகமடைந்த வங்கியின் மேலாளர் அந்த நகைகளை பரிசோதனை செய்து பார்த்த போது, அவை கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது. மேலும் இந்த மோசடிக்கு வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சுரேஷ் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து வங்கியின் மேலாளர் அளித்த புகாரின் பேரில் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments