கிரிப்டோ விதிகளை மீறினால் ரூ.20 கோடி அபராதம்.. குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சி மசோதா தாக்கல்?
நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலாக உள்ள கிரிப்டோகரன்சி மசோதாவில், கிரிப்டோகரன்சி தொடர்பான விதிகளை மீறுவோருக்கு 20 கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டம் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கிரிப்டோஅசெட்ஸ் என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதா நிறைவேற்றப்பட்டால், கிரிப்டோகரன்சிகளை வைத்திருப்பவர்கள் அவற்றின் மதிப்பை அரசிடம் தெரிவித்து அதன் அடிப்படையில் வரி விதிக்கப்படும் என கூறப்படுகிறது.
கிரிப்டோ விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் இந்த வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கிரிப்டோகாயினை ஒரு செலாவணியாக மத்திய அரசு அங்கீகரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments