ஈராக்கில், 4 ஆண்டுகளுக்குப் பின் குண்டு வெடிப்பு : 4 பேர் உடல் சிதறி பலி

0 2329

ராக்கில், பாதுகாப்பான நகரங்களுள் ஒன்றாக கருதப்பட்ட பஸ்ரா-வில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

2017ம் ஆண்டு இறுதியில், ஈராக்கில் பதுங்கியிருந்த ஐ.எஸ் அமைப்பினரை, அமெரிக்க படைகளின் உதவியுடன் அந்நாட்டு ராணுவம் விரட்டி அடித்தது. அன்று முதல் கச்சா எண்ணெய் உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் பேர் பெற்ற பஸ்ரா நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

4 ஆண்டுகளாக அங்கு எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழ்த்தப்படாத நிலையில், இன்று நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட பைக்கை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தனர். 4 பேர் உடல் சிதறி உயிரிழந்ததால் சாலை முழுதும் ரத்தக்கரை படிந்திருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments