4 நாட்களாக தீப்பிடித்து எரியும் சரக்கு கப்பல் : ஹெலிகாப்டர்கள், கப்பல்கள் மூலம் தீயை அணைக்க முயற்சி

0 2817

சுவீடனில் சரக்கு கப்பல் ஒன்றில், கடந்த 4 நாட்களாக பற்றி எரியும் தீயை அணைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற கப்பல்கள் மூலம் பெருமளவு தண்ணீரை பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில், தீயணைப்பு வீரர்களும் அந்நாட்டு கடலோர காவல்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

கப்பலில் மரப் பலகைகள் ஏற்றி வரப்பட்ட நிலையில், தீப்பிடித்திருப்பதால், அதனை அணைக்கும் பணி சவால் மிகுந்ததாக உள்ளது. லைபீரியாவை சேர்ந்த அந்த கப்பலில் 17 ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments