பிளாஸ்டிக் தடையை மாநகராட்சியில் தீவிரமாக நடைமுறைபடுத்த, அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு

0 2443

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் தடையை தீவிரமாகவும், முழுமையாகவும் நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடைகள், வணிக வளாகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளவும், விதி மீறல் இருந்தால் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெருமழை காலத்தில் வடிகால்கள், கால்வாய்களில் தேங்கிய பிளாஸ்டிக் குப்பைகளால் தண்ணீரை வெளியேற்ற சிரமமாக இருந்தது எனவும், வருங்காலத்தில் இவ்வாறு நடக்காமல் தடுக்க தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை மக்களிடம் ஊக்குவிக்க  வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments