ஹனோயில் வரும் 2025-க்கு பிறகு பைக்குகளுக்கு தடை : புகை வெளியேற்றத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை
வியட்னாம் தலைநகர் ஹனோயில் வரும் 2025ஆம் ஆண்டுக்கு பிறகு மோட்டார் பைக்குகளுக்கு தடைவிதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து நெரிசல் மற்றும் புகை வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹனோய் நகரில் 56 லட்சம் மோட்டார் பைக்குகள் உள்ள நிலையில், போதுமான பொதுப்போக்குவரத்து இல்லாத காரணத்தினால், அண்மை காலமாக தனி நபர் வாகனப் பயன்பாடு அதிகரித்துள்ளாதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 2030ஆம் ஆண்டில் அமல்படுத்தப்படவிருந்த மோட்டார் பைக் தடை, 5 ஆண்டுகளுக்கு முன்பே முக்கிய இடங்களில் நடைமுறைக்கு வர உள்ளது.
Comments