வருங்காலத்தில் கொரோனாவை விட அதிக ஆபத்துகள் வரலாம் - ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி விஞ்ஞானி சாரா கில்பெர்ட் எச்சரிக்கை
வருங்காலத்தில் ஏற்படும் பெருந்தொற்று பாதிப்புகள் மிகவும் ஆபத்தானதாகவும் இருக்கலாம் என ஆக்ஸ்போர்டு - ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான சாரா கில்பெர்ட் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், நாம் அனைத்தையும் கடந்துவிட்டதாகவும், இது தான் நமது வாழ்வாதாரத்திற்கு வைரஸ் தொற்றால் ஏற்படும் கடைசி அச்சுறுத்தல் என்றும் நினைக்கவேண்டாம் என்றார்.
மேலும், தடுப்பூசிகளால் தூண்டப்படும் ஆன்டிபாடிகள், ஒமிக்ரான் தொற்று ஏற்படுவதைத் தடுப்பதில் குறைவான செயல்திறன் கொண்டதாக இருக்கலாம் என குறிப்பிட்ட சாரா கில்பெர்ட், ஒமிக்ரான் பற்றி நாம் முழுவதும் அறிந்துகொள்ளும் வரை கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
Comments