சொத்துக்காக பெற்றோரிடம் சண்டையிட்டு வந்த மகன்கள்... தாங்க முடியாத விரக்தியில் முதிய தம்பதி விஷமருந்தி தற்கொலை

0 2547

திண்டுக்கல்லில் சொத்துக்காக மகன்கள் அடிக்கடி சண்டையிட்டு வந்ததை தாங்க முடியாத விரக்தியில் முதிய தம்பதியினர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

வேடசந்தூர் அருகே அழகர்சாமி, முத்துச்சாமி ஆகிய இருவரும் தங்கள் பெற்றோரிடம் தொடர்ச்சியாக சொத்துத் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனை தாங்கிக்கொள்ள முடியாத விரக்தியில் முதிய தம்பதியினரான பொப்பனன், வெள்ளையம்மாள் ஆகியோர் இரவில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் தம்பதியரின் மகன்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments