சிதம்பரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவரின் வயிற்றில் ஸ்குரூ டிரைவரால் குத்திவிட்டு, செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் கொள்ளையன்..!

0 4103

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவரின் வயிற்றில் ஸ்குரூ டிரைவரால் குத்திவிட்டு, செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் பரணிகண்ணன் என்ற மாணவர், சொந்த ஊரான கரூர் சென்றுவிட்டு நள்ளிரவில் சிதம்பரம் திரும்பியுள்ளார்.

இரவு இரண்டரை மணியளவில் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோவில் விடுதிக்கு வந்த அவர், தனது பை ஒன்றை ஆட்டோவிலேயே மறந்து வைத்துவிட்டதை அறிந்து அதனை எடுப்பதற்காக நண்பர் ஒருவருடன் சைக்கிளில் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வந்துள்ளார்.

அங்கு நின்றிருந்த ஒரு கும்பல், இருவரையும் தாக்கிவிட்டு பணம், செல்போன் உள்ளிட்டவற்றைப் பறித்துச் சென்றது. அப்போது நடந்த தகராறில் ஸ்க்ரூ டிரைவரால் இடுப்பில் குத்தியதில் பரணிகண்ணன் படுகாயமடைந்தார். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments