சிரியாவின் துறைமுகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

0 2553

சிரியா நாட்டில் உள்ள முக்கியமான துறைமுகம் ஒன்றின் மீது இஸ்ரேல் வான் வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

சிரியாவில் அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்றும் வரும் நிலையில், அந்நாட்டின் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்துவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் லடாக்கியா துறைமுகம் மீது இஸ்ரேல் போர்விமானம் ஏவுகணைகளை வீசியதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

துறைமுகத்தில் ஆயுதங்களுடன் கண்டெயினர்கள் இருந்த இடங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் அப்பகுதி முழுவதும் நாசமானதாவும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments