அரியலூரில் வயதானவர்களிடம் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக பலரிடம் பணத்தை கையாடல் செய்த இளம்பெண்ணை கைது செய்த போலீசார்.!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், வயதானவர்கள் மற்றும் படிப்பறிவில்லாதவர்களிடம் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி பலரது ஏடிஎம் கார்டில் இருந்து பணத்தை கையாடல் செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சன்னதித் தெருவில் உள்ள ஏடிஎம்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து அந்த பகுதியில் ரோந்து சென்ற போலீசார், சந்தேகப்படும்படியாக ஏடிஎம் வாசலில் நின்றுகொண்டிருந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த பெண் கடலூர் மாவட்டம் பெரியார் நகரை சேர்ந்த உமாமகேஸ்வரி என்பதும், பலரை ஏமாற்றி ஏடிஎம் கார்டில் இருந்து பணத்தை திருடியதும் தெரியவந்தது.
Comments