பல் மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வில் இடம் ஒதுக்கியும், கல்லூரியில் சேர்க்க மறுக்கப்பட்ட மாணவிக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!
பல் மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வில் இடம் ஒதுக்கியும், கல்லூரியில் சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவிக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2014-ல் மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாளில், மாணவி ஜெயரஞ்சனி என்பவருக்கு மாலை 4 மணிக்கு இடம் ஒதுக்கி உத்தரவிட்ட நிலையில், அன்றே சேர முடியாததால் மறுநாள் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரிக்கு சென்றபோது கடைசி நாள் முடிந்துவிட்டதாக கூறி, சேர்க்கை வழங்க நிர்வாகம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில், கடைசி தேதிக்கு முன்கூட்டியே கலந்தாய்வு நடத்தாதது தேர்வு குழுவின் தவறு என குறிப்பிட்ட நீதிபதி, மாணவிக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும், என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Comments