2 பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளி தாயும் தற்கொலை : கரூரில் பரபரப்பு !

0 3170

ரூரில் பெண் ஒருவர் இரு மகள்களை கிணற்றில் வீசியதோடு தானும் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

செம்பியாநத்தத்தை அடுத்த பூசாரிபட்டியில் சக்திவேல் என்பரது மனைவி சரண்யா, கனிஷ்கா என்ற 6 வயது மகளையும் , புவிஷா என்ற 3 வயது மகளையும் அழைத்துக்கொண்டு நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

வீட்டின் அருகே உள்ள 50 அடி ஆழ கிணற்றில் குழந்தைகளை வீசி, சரண்யாவும் குதித்துள்ளார். மனைவியும் குழந்தைகளும் காணாமல் போனதை அறிந்து தேடிய சக்திவேல்,அவர்கள் கிணற்றில் மிதப்பதை பார்த்துள்ளார்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், சரண்யா மற்றும் 2வது மகளின் சடலங்களை மீட்ட நிலையில், முதல் மகளின் சடலத்தை தேடி வருகின்றனர்.

தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக சரண்யாவுக்கும் அவரது கணவருக்கும் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments