திருத்திக் கொள்ளுங்கள் அல்லது மாற்றப்படுவீர்கள் : பாஜக எம்பிக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

0 7194

பாஜக எம்பிக்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடந்த பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர், இந்த விவகாரத்தில் பாஜக எம்பிக்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் இல்லையெனில் மாற்றப்படுவீர்கள் என எச்சரித்தார்.

நாடாளுமன்ற அமர்வுகளின் போது பாஜக எம்பிக்கள் சரியாக ஆஜராவதில்லை என கடந்த காலங்களிலும் மோடி எச்சரிக்கை விடுத்திருந்தாலும் இந்த முறை அவர் கடினமான வார்த்தைகளை பயன்படுத்தி எம்பிக்களை எச்சரித்ததாக கூறப்படுகிறது.

குளிர்கால கூட்டத் தொடர் முழுமைக்கும் எதிர்க்கட்சி எம்பிக்கள் 12 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பது குறித்து இந்த கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மாநிலங்களவையில் நடந்து கொண்ட விதத்திற்காக அவர்கள் மன்னிப்புக் கேட்டால், சஸ்பென்ஷன் வாபஸ் பெறப்படும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments