வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கடும் உயர்வு
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர் மழையின் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. கடந்த மாதம் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் கத்தரிக்காய் 40 ரூபாயில் இருந்து 100 ரூபாய்க்கும், வெண்டக்காய் 40 ரூபாயில் இருந்து 100 ரூபாய்க்கும் , பீன்ஸ் 50 ரூபாயில் இருந்து 100 ரூபாய்க்கும் , அவரை 60 ரூபாயில் இருந்து 100 ரூபாய்க்கும், கேரட் 50 ரூபாயில் இருந்து 90 ரூபாய்க்கும், பீட்ரூட் 40 ரூபாயில் இருந்து 70 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
Comments