பட்டா நிலத்தில் சந்தன மரங்களை வளர்த்து வெட்டலாமா? உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கேள்வி

0 30680

பட்டா நிலங்களில் சந்தன மரங்களை வளர்த்து வெட்டுவதற்கு அரசு அனுமதிக்குமா? என உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க கோரி, டொமினிக் ரவி என்பவர் தொடர்ந்த வழக்கில், நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு இவ்வாறு கேள்வி எழுப்பியது. மேலும், தமிழகத்தில் அதிக மழைப் பொழிவு உள்ள நிலையில், அதனை சேமிப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்றும் வினவினர்.

விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படும் போது விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து வேளாண்துறை மற்றும் வனத்துறை செயலாளர்கள் பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments