தமிழகம் முழுவதிலும் 1543 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு - இந்து சமய அறநிலையத்துறை
தமிழகம் முழுவதிலும் இருந்து திருக்கோவில்களுக்கு சொந்தமான சுமார் ஆயிரத்து 543 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆக்கிரமிப்பு நிலங்களை நவீன ரோவர் உபகரணங்களை பயன்படுத்தி கண்டறிந்து வருவதாகவும், இதுவரை 424 நபர்களிடம் இருந்து நிலம், மனைகள், திருக்குளங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments