துர்நாற்றம் வீசுவதாக கூறி பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட மீன் விற்பனை செய்யும் மூதாட்டி
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மீன் விற்பனை செய்யும் மூதாட்டி பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட விவகாரம் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துனர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என குளச்சல் அரசு பேருந்து பணிமனை மேலாளர் தெரிவித்துள்ளார்.
வாணியக்குடியைச் சேர்ந்த செல்வம் என்னும் மூதாட்டி மீன் விற்பனை செய்துவிட்டு வீட்டுக்கு செல்ல வாணியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறிய போது, மூதாட்டியின் உடலில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பேருந்து நடத்துனர் அவரை கீழே இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மூதாட்டி, பேருந்து நிலையத்தில் கத்தி கூச்சலிட்ட வீடியோ வைரலானது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துனர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு பேருந்து பணிமனை மேலாளர் கூறியுள்ளார்.
Comments