தடுப்பூசி செலுத்தாமல் சான்றிதழ் வழங்கினால் நடவடிக்கை - ஊழியர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் எச்சரிக்கை
தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் வழங்கினால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், தடுப்பூசி செலுத்தியது உறுதி செய்யப்பட்ட பிறகு தான் தடுப்பூசி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், போலியாக சான்றிதழ் வழங்கினால் உரிய சட்ட விதிகளின்படி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க, மாவட்ட வாரியாக தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Comments