சமூக ஆர்வலர் என்ற போர்வையில் சிறுமிகளிடம் பாலியல் சேட்டை.. தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பெண்கள்

0 2620

ஆந்திராவில் சமூக ஆர்வலர் என்ற பெயரில் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் சேட்டை செய்த காமுகனுக்கு தர்ம அடி கொடுத்த பெண்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாகபட்டணம் காஜூவாக்கா-வில் (Gajuwaka) உள்ள பிரகாஷ் நகர் பகுதியை சேர்ந்த தோமன் சின்னா ராவ் என்பவன் ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறான். அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு சென்ற அவன், தலைமையாசிரியரிடம் பேசி மாணவ மாணவிகளுக்கு பென்சில், ரப்பர் ஆகியவற்றை கொடுத்ததாக கூறப்படுகிறது.

தன்னிடம் இன்னும் நிறைய பென்சில், ரப்பர் உள்ளதாகவும், தன் வீட்டுக்கு வந்தால் அவற்றை தருவதாகவும் கூறியுள்ளான். இதனையடுத்து அவனது வீட்டிற்கு சென்ற சில சிறுமிகளிடம் அவன் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அவனை அடித்து விளாசிய அப்பகுதி பெண்கள், போலீசில் ஒப்படைத்தனர்.

தோமன் சின்னா ராவை கைது செய்யக் கோரி அப்பகுதி மக்கள் மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து அவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments