இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்.... இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

0 5596

பண மோசடி தொடர்பான வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் இன்று ஆஜராக அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

தொழிலதிபரின் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கில் சுகேஷ் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக நடிகைகள் ஜாக்குலின், நோரா ஃபதேகி உள்ளிட்டோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், ஜாக்குலினுக்கு 10 கோடி ரூபாய் அளவிற்கு பரிசுகளை சுகேஷ் வழங்கியதாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரியவந்தது.

இதை தொடர்ந்து, டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments