இந்தியா முழுவதும் 2.13 லட்சம் ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன - மத்திய நிதித்துறை இணை அமைச்சர் தகவல்
இந்தியா முழுவதும் 2லட்சத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருவதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கரத் தெரிவித்துள்ளார்.
மக்களவையில், இது குறித்து உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நாடு முழுவதும் 2 லட்சத்து 13 ஆயிரம் ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன என்றார்.
இவற்றில் 47 சதவீதத்துக்கும் அதிகமானவை, கிராம மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments