வீடு வாங்கித் தருவதாக போலி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை வழங்கி 12 லட்ச ரூபாய் மோசடி ; 3 பேர் கைது

0 1714
ரூ.12 லட்சத்திற்கு 4 வீடுகள் வாங்கித் தருவதாக மோசடிப் புகார்

முத்தியால்பேட்டையில் வீடு வாங்கித் தருவதாக போலி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை வழங்கி 12 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மண்ணடியை சேர்ந்த முனியசாமியிடம், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 4 வீடுகள் வாங்கித் தருவதாக, 12 லட்ச ரூபாய் பெற்று போலி ஆணை வழங்கி 4 பேர் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

முனியசாமி அளித்த புகாரில், மோசடியில் ஈடுபட்டதாக சரோஜா, ஆறுமுகம், வெங்கடேசன் ஆகியோரை கைது செய்த போலீசார், தலைமறைவான ஜெகதீஷை தேடி வருவதாக தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments