டெல்லி கலவர வழக்கில் முதன்முதலாக ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பு
கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த கலவர வழக்கில் முதன்முதலாக ஒருவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக தலைநகர் டெல்லியில் இருவேறு பிரிவினர் இடையே பெருங் கலவரம் ஏற்பட்டது.
அதில் மனோரி என்ற மூதாட்டியின் வீடு சூறையாடப்பட்டு தீக்கிரையானது. இந்த வழக்கில் தினேஷ் யாதவ் என்பவன் கைது செய்யப்பட்டிருந்தான். விசாரணையின் முடிவில் தினேஷ் யாதவ் குற்றவாளி என்றும், தண்டனை விபரங்கள் வரும் 22ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அவனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
Comments