ஜெயின் மற்றும் லிங்காயத் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு... கர்நாடகாவில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் முட்டை வழங்குவதில் சிக்கல்
கர்நாடகாவில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் முட்டை வழங்குவதற்கு ஜெயின் மற்றும் லிங்காயத் சமூகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அம்மாநிலத்தின் 7 மாவட்டங்களில் 14 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுக் கல்வித்துறை அறிக்கை அளித்துள்ளது. இதையடுத்து குறிப்பிட்ட மாவட்டங்களில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவுடன் அவித்த முட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் கர்நாடக அரசின் இந்தத் திட்டத்திற்கு லிங்காயத் மற்றும் ஜெயின் சமூகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும் முட்டைக்குப் பதில் தானியங்கள், பருப்பு வகைகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
Comments