நாகாலாந்து தாக்குதல் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்
நாகாலாந்தில் ராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அம்மாநிலத்தில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்த முன்வந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 6 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய பாதுகாப்புச் செயலாளர், மத்திய உள்துறைச் செயலாளர், தலைமைச் செயலாளர் மற்றும் நாகாலாந்து காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Comments