ஆங் சாங் சூகியின் சிறைத் தண்டனையை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ராணுவ வாகனம் புகுந்ததில் 5 பேர் கொடூரக் கொலை

0 2799

மியான்மரில் ஆங் சாங் சூகிக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை கண்டித்து பேரணியாக சென்ற மக்கள் கூட்டத்தில் ராணுவ டிரக் புகுந்து தறிக்கெட்டு ஓடியதில் 5 பேர் உடல் நசுங்கி படுகொலை செய்யப்பட்டனர்.

ஆங் சாங் சூகி மற்றும் அதிபராக இருந்த வின் மைண்ட்க்கு 2 ஆண்டு வீட்டுச் சிறை விதிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யங்கூன் நகரில் பதாகையுடன் பேரணியாக சென்ற மக்கள் கூட்டத்தில் திடீரென புகுந்த ராணுவ வாகனம் 5 பேர் மீது அநாயசமாக ஏற்றிக் கொன்றது.

பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது ராணுவம் கண்மூடித்தன துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. 15-க்கும் மேற்பட்ட இளைஞர்களை ராணுவம் சாலைகளில் இழுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments