கேப்பியா ? இனி கேப்பியா ? நீதிமன்றத்தில் வழக்கறிஞரை விரட்டிய மாதர் சங்கம்..! எங்கே போனீங்கன்னு கேட்டது குத்தமா?

0 5511
கேப்பியா ? இனி கேப்பியா ? நீதிமன்றத்தில் வழக்கறிஞரை விரட்டிய மாதர் சங்கம்..! எங்கே போனீங்கன்னு கேட்டது குத்தமா?

திண்டுக்கல்லில் பாலியல் வழக்கில் சிக்கிய நர்சிங் கல்லூரி தாளாளருக்கு ஜாமீன் வழங்கிய மகிளா நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினரிடம், மற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக ஏன் குரல் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய வழக்கறிஞரை விரட்டிச்சென்று மாதர் சங்கத்தினர் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம் பட்டியில் இயங்கி வந்த நர்சிங் கல்லூரி ஒன்றில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாலியல் வன்கொடுமை வழக்கில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் கைது செய்யப்பட்டார். அவர் மீது இரண்டு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த 4ம் தேதி மகிளா நீதிமன்றம் அந்த இரண்டு போக்சோ வழக்கிலும் ஜாமின் வழங்கியது.

இதனை கண்டிக்கும் விதமாக மகிளா நீதிமன்றம் முன்பாக மாதர் சங்க நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது தன்னுடைய வழக்கு விசாரணைக்காக திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் தெய்வேந்திரன் என்பவர், இளம் பெண் ஒருவரை அழைத்து வந்திருந்தார்.

அவர் தனது கட்சிக்காரரான இந்த இளம் பெண்ணுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்க நிர்வாகிகளிடம் சென்று, இந்தப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைக்கு வராத மாதர் சங்கம் மற்ற வழக்குகளில் தலையிடுவது ஏன்.? கேள்வி எழுப்பினார்

அதற்கு ஆர்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய பாலபாரதி, அவங்க எங்க கிட்ட வரலைய்யா... என்று அமைதியாக பதில் அளித்தார்,அதற்கு அந்த வழக்கறிஞர் வந்தால் தான் ஆதரவாக குரல் கொடுப்பீங்களா ? என்று கேட்டதுடன் இது போன்ற வழக்குகளில் யாருடைய தூண்டுதலின் பேரில் போராட்டம் நடத்து கின்றீர்கள் என்று கேள்வி எழுப்பியதும், பாலபாரதி கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்... என்று குரல் எழுப்பியதை தொடர்ந்து மற்ற மாதர் சங்க நிர்வாகிகள் அந்த வழக்கறிஞரை நோக்கி ஆவேசமாக கோஷம் எழுப்ப.. மாதர் சங்க ஆர்ப்பாட்டத்திற்கு பின்னணியில் இருந்த சிலர் அந்த வழக்கறிஞரிடம் வந்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த வழக்கறிஞரை கைது செய்யக்கோரி மாதர் சங்கத்தினர் கோஷம் எழுப்ப, மாதர் சங்கத்தினருக்கு ஆதரவாக சில தோழர்கள் அந்த வழக்கறிஞரை அடிக்க பாய, காவல்துறையினர் அவரை தடுத்து நீதிமன்றத்துக்குள் அனுப்பி வைத்தனர்.

ஆனால் மாதர் சங்கத்தை சேர்ந்த இரு பெண்கள் போலீசாரையும் மீறி அந்த வழக்கறிஞரை விரட்டிச்சென்று கையை பிடித்து இழுத்து அடிக்க முயன்றனர். ஒருவழியாக விட்டால் போதும் என்று வழக்கறிஞர் தெய்வேந்திரன் நீதிமன்றத்துக்குள் சென்று தஞ்சம் புகுந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் தெய்வேந்திரன் மாதர் சங்கத்தினர் அனைத்து பெண்களுக்கும் குரல் கொடுப்பதில்லை என்றும் தனது கட்சிக்காரரான இளம் பெண்ணின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, அது தொடர்பான புகாரில் சம்பந்தப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், இது போன்று ஏராளமான பெண்கள் பாதிக்கப்படும் போது மாதர் சங்கம் ஏன் குரல் கொடுப்பதில்லை ? என்று கேள்வி எழுப்பியதற்கு தன்னை தாக்க வந்ததாக தெரிவித்தார்’

மாதர் சங்க போராட்டத்தில் கேள்வி எழுப்பியது கூட பிரச்சனையில்லை, கேள்வி எழுப்பிய வழக்கறிஞர் குறிப்பிட்ட அடையாளத்துடன் காணப்பட்டதுதான் தோழர்கள் ஆவேசம் காட்ட முக்கிய காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments