காஞ்சிபுரத்தில் தனி நபரால் குளம் மூடப்பட்டு ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்ட வருவாய் துறையினர்..!

0 4103

காஞ்சிபுரம் அருகே தனி நபரால் குளம் மூடப்பட்டு ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, மீட்க காஞ்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் காரை கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பிலான குளம் மற்றும் புறம்போக்கு நிலத்தை விவசாயி ஒருவர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக கூறப்பட்டது.  வருவாய் துறையினர் நேரில் சென்று சமன் செய்யப்பட்டிருந்த நிலத்தை ஜேசிபி இயந்திரங்களை கொண்டு மீண்டும் குளமாக மாற்றி நீர்நிலையை மீட்டனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments