தமிழக அரசு பேருந்துகளின் சேவை பம்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஆன்டனி ராஜு..!

0 3060

தமிழக அரசு பேருந்துகளின் சேவை பம்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஆன்டனி ராஜு தெரிவித்துள்ளார்.

சென்னை வந்த அவர், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர்  ராஜகண்ணப்பன் ஆகியோரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

கேரள - தமிழக எல்லை சோதனைச் சாவடிகளில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க இரு மாநில அதிகாரிகள் அடங்கிய போக்குவரத்துக் குழு அமைக்கப்பட உள்ளதாக கூறினார். பாரத் சீரிஸ் பதிவு நடைமுறைக்கு வருவதால், மாநிலங்களுக்கு வாகனப் பதிவு மூலம் கிடைக்கும் வருவாய் குறையும் என்றார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை நீட்டிப்பதில் இருந்து மாநில அரசுப் பேருந்துகளுக்கு விலக்கு அளிப்பது குறித்து தமிழக அமைச்சருடன் பேசியதாகவும்  தெரிவித்தார். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments