அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்துவது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே மோதல்

0 2413
அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்துவது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே மோதல்

மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தியில் பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்துவது தொடர்பாக, இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் போலீசார் முன்னிலையிலேயே ஒருவரை ஒருவர் கற்களாலும், கட்டையாலும் தாக்கிக் கொண்டனர்.

அம்பேத்கரின் 65ஆவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, பட்டவர்த்தி பேருந்து நிறுத்தத்தில் அவரது படத்தை வைத்து வி.சி.க.வினர் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அங்கு முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டனர்.

இருப்பினும், போலீசார் முன்னிலையிலேயே ஒருவரை ஒருவர் கற்களாலும், கொம்பாலும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த கற்குவியலுக்கு அருகே நின்று கொண்ட சிலர், விடாமல் கற்களை அள்ளி எதிர் தரப்பினர் மீது வீசினர்.

இதனையடுத்து, நிலைமையை சமாளிக்க லேசான தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். 5 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments