ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி தொடர்பான வழக்கு ; தீபக், தீபாவை வழக்கில் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு

0 3003
ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி தொடர்பான வழக்கு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி தொடர்பான வழக்கில், அவரின் சட்டப்பூர்வ வாரிசுகளான தீபக், தீபாவை சேர்க்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2008, 2009ஆம் ஆண்டுக்கான செல்வ வரி தொடர்பான கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறையினர் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர். மேலும், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் ஜெயலலிதாவும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனை அடுத்து, ஜெயலலிதாவை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, வருமான வரித்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, ஜெயலலிதா காலமாகிவிட்டதால், தீபக், தீபாவை வழக்கில் சேர்க்க உத்தரவிட்டு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments