அதிமுக தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு

0 3040
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் போட்டியின்றி தேர்வு

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையர்களாக செயல்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இதனை அறிவித்தனர்.

தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஓபிஎஸ், இபிஎஸ் பெற்றுக் கொண்டனர். ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் வெற்றிப்பெற்றதை அடுத்து அதிமுகவினர் உற்சாகத்துடன் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் மரியாதை செலுத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments