ஒமிக்ரான் தொற்று பரவல் எதிரொலி ; இந்திய பங்குச்சந்தைகளில் இன்று வணிகம் வீழ்ச்சி

0 2916
இந்திய பங்குச்சந்தைகளில் இன்று வணிகம் வீழ்ச்சி

ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் இன்று வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது.

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நாள் முதல் உலக அளவில் பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. பெட்ரோலிய விலையும் வீழ்ச்சியடைந்தது.

அதன் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தைகளிலும் பங்கு விலைகள் சரியத் தொடங்கின. இன்றைய வணிக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 949 புள்ளிகள் சரிந்து 56 ஆயிரத்து 747 ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 284 புள்ளிகள் சரிந்து 16 ஆயிரத்து 912 ஆக இருந்தது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments