பேருந்து படிக்கட்டு, ஜன்னலில் தொங்கியவாறு பயணிக்கும் பள்ளி மாணவர்களின் வீடியோ வெளியீடு

0 2917

திருவள்ளூர் அருகே பேருந்தில் பள்ளி செல்லும் மாணவர்கள் சிலர் படிக்கட்டிலும் பக்கவாட்டு ஜன்னல் கம்பியைப் பிடித்தவாறும் தொங்கிக் கொண்டு பயணிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஊத்துக்கோட்டை அருகே மெய்யூர் செல்லும் அரசுப் பேருந்திலும் பொன்னேரி அடுத்த சோழவரம் பகுதியிலும் இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பள்ளிச் சீருடையுடன் ஜன்னல் கம்பியைப் பிடித்தவாறு தொங்கிக் கொண்டும் சாலையில் கால்களைத் தேய்த்தவாறும் அந்த மாணவர்கள் சாகசம் செய்கின்றனர்.

இன்னும் சிலர் ஜன்னல் கம்பிகள் வழியே மேற்கூரையை அடைவதற்காக காலணிகளை சாலையில் கழற்றிவிடும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. கரணம் தப்பினால் மரணம் என்கிற ரீதியில் இந்த சிறுவர்கள் செய்யும் சாகசம் நெஞ்சைப் பதறவைப்பதாக உள்ள நிலையில், பெற்றோர், ஆசிரியர், காவல்துறை ஆகிய மூன்று தரப்பினரின் அறிவுரையும் எச்சரிக்கையும் அவர்களுக்குத் தேவை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments