பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட உள்ளதாக தகவல்

0 4150
நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட உள்ளதாக தகவல்

மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டசிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவர் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொழிலதிபரின் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கில் சுகேஷ் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து விசாரணை நடைபெற்ற நிலையில், ஜாக்குலினுக்கு 10 கோடி ரூபாய் அளவிற்கு பரிசுகளை சுகேஷ் வழங்கியதாக அமலக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரியவந்தது.

இந்நிலையில், ஜாக்குலினுக்கு எதிராக அமலாக்கத்துறையினர் லுக் அவுட் சர்குலர் வெளியிட்டதால், துபாய் செல்லவிருந்த அவர், மும்பையில் தடுத்து நிறுத்தப்பட்டார். இதை தொடர்ந்து, மோசடி வழக்கு தொடர்பான விசாரணை முடியும் வரை ஜாக்குலின் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படமாட்டார் என அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments