முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில முதலமைச்சர்கள் மட்டுமே பேசி முடிவெடுக்க முடியும் ; கேரள அமைச்சர் அந்தோணி ராஜ்

0 2255
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில முதலமைச்சர்கள் மட்டுமே பேசி முடிவெடுக்க முடியும்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில முதலமைச்சர்கள் மட்டுமே பேசி முடிவெடுக்க முடியும் எனக் கேரளப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனைச் சந்தித்துப் பேசிய அவர் இரு மாநிலங்கள் இடையே மீண்டும் பேருந்துப் போக்குவரத்தைத் தொடங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அந்தோணிராஜ், தென் மாநிலங்களின் போக்குவரத்துத் துறை அமைச்சர்களின் கூட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் கேரளத்தில் நடைபெற உள்ளதாகவும், அதில் நெடுஞ்சாலைச் சுங்கச் சாவடி பிரச்சனை, மின்சாரப் பேருந்துகள் வாங்குவது, மத்திய அரசிடமிருந்து போக்குவரத்துத் துறைக்கு நிதி பெறுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments