சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவர் சஸ்பெண்ட்

0 3562
சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவர் சஸ்பெண்ட்

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 26-ந் தேதி ஸ்கேன் எடுக்க அங்கு வந்த இளம்பெண்ணை, ஸ்கேன் மையத்தில் இருந்த மருத்துவர் சக்கரவர்த்தி, மறுநாள் வருமாறு அனுப்பி வைத்தாக சொல்லப்படுகிறது. மறுநாள் அந்த பெண் வந்த போது, ஆயவகத்தில் இருந்த செவிலியரை வெளியே அனுப்பிவிட்டு, இளம்பெண்ணிடம் மருத்துவர் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து, இளம்பெண்ணின் தாயார் மருத்துவமனை டீனிடம் புகாரளிக்கவே, விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும், விசாரணை அறிக்கை மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மருத்துவர் சக்கரவர்த்தியை சஸ்பெண்ட் செய்து மருத்துவகல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments