எதிர்க்கட்சித் தலைவர் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் அமமுகவினர் 50 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு..!

0 2271

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில், எதிர்க்கட்சித் தலைவர் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் அமமுகவினர் 50 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக - அமமுகவினர் இடையே தள்ளுமுள்ளு உருவானது.

அதிமுகவின் முன்னணி நிர்வாகிகளின் காரை வழிமறித்த அமமுகவினர் சசிகலாவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய நிலையில், பதிலுக்கு அதிமுகவினரும் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அத்தோடு, கூட்டத்தில் சென்ற எதிர்க்கட்சித் தலைவரின் கார் மீது சிலர் காலணியை தூக்கி வீசிய வீடியோவும் வெளியானது.

இது தொடர்பாக மாறன் என்பவர் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அமமுக கட்சியை சேர்ந்த 50 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments