கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் தடுப்பூசியின் திறனை ஒமிக்ரான் வைரஸ் தடுத்துவிடுமா? தீவிர ஆராய்ச்சியில் ICMR விஞ்ஞானிகள்
கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் தடுப்பூசியின் திறனை ஒமிக்ரான் வைரஸ் தடுத்துவிடுமா? என்ற ஆராய்ச்சியில் ICMR விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதே போன்று ஏற்கனவே கொரோனா பாதித்து அதனால் உடலில் ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை ஒமிக்ரான் வைரஸ் அழித்துவிடுமா? என்ற ஆய்வையும் அவர்கள் மேற்கொண்டுள்ளனர். இதற்காக மும்பை டோம்பிவாலியில் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்ட நபரின் மாதிரியில் இருந்து ஒமிக்ரான் வைரசை பிரித்து ஆய்வகத்தில் அதை வளர்த்து ஆய்வுப் பணி நடக்க உள்ளது.
இந்த நபரின் மாதிரியில் இருந்து ஒமிக்ரான் மரபுக்கூறை பிரித்து எடுக்க ஒருவார காலம் தேவைப்படும் என கூறப்படுகிறது. தேவையான அளவுக்கு ஒமிக்ரான் மரபுக்கூறுகள் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட பிறகு அதன் மீது neutralisation study மேற்கொள்ளப்படும்.
அதில் இருந்து ஒமிக்ரானை அழிப்பதற்கான திறன் இப்போதுள்ள தடுப்பூசிகளுக்கு உள்ளதா என்பது தெரிய வரும் என ICMR வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments