கனமழையால் ஓட்டு வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

0 3007

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓட்டு வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காடனேரி கிராமத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பவரது வீடு கனமழையால் உறுதித்தன்மையை இழந்திருந்த நிலையில், இன்று காலை திடீரென இடிந்து விழுந்ததுள்ளது. வீட்டுக்குள் இருந்த அவரது 3 வயது மகள் முத்தீஸ்வரி மீது சுவர் விழுந்ததால், படுகாயம் அடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிறுமியின் பெற்றோரும், அவர்களது இளைய மகனும் காயமின்றி தப்பினர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்,  சிறுமியின் உடலைப் பார்த்து தாய் கதறி அழுதது அங்கிருந்தோரை கலங்க வைத்தது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments