நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி

0 6663

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 325 ரன்களும், நியூசிலாந்து 62 ரன்களும் எடுத்தது.  தொடர்ந்து 2ஆவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.  540 ரன்கள் என்ற இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து, 3ஆவது நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில் 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நியூசிலாந்து அணி 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments